‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’

‘தரமணி’, ‘துப்பறிவாளன்’ என்று அடுத்தடுத்த ஆண்ட்ரியாவின் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் சித்தார்த்துடன் சேர்ந்து நடித்திருக்கும் ஹாரர் படம்தான் ‘அவள்’. இந்தப் படத்தில் கணவன், மனைவியாக இருவரும் நடித்திருப்பதால் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லையாம். அதுவும் ஒரே பாடலில் எட்டு லிப் லாக் கிஸ் அடிக்கும் காட்சிகள் உள்ளனவாம்.
இந்த விஷயத்தைப் பற்றி ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது,
‘’முன்பு இல்லாமல் தற்போது யாதர்த்த வாழ்க்கையை சினிமா தத்ரூபமாகக் காட்டுகிறது. அப்படி சகஜமாகி விட்ட லிப் லாக் முத்தக் காட்சிகளை படத்திலும் காட்டுகிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி இப்போதெல்லாம் லிப் லாக் முத்தம சர்வ சாதாரணமான ஒன்றுதான். அதனை ஏன் இப்படிப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை’’ என்று நச்சுனு கூறுகிறார் ஆண்ட்ரியா.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.