கார்த்திக் சுப்பாராஜின் ‘மேயாத மான்’ தீபாவளிக்கு திடீர் ரிலீஸ்

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள படம்தான் ‘மேயாத மான்’. இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஜாலியான காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இசையமைத்துள்ளனர்.
இந்தப் படம் எப்போது ரிலீஸ் என்று தெரியாத நிலையில் முன்பு இருந்தது. ஆனால் திடீரென்று தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார் கார்த்திக் சுப்பாராஜ். விஜய்யின் ‘மெர்சல்’ வருவதைப் பற்றி எந்த பயமும் இல்லை போல இந்த மேயாத மானுக்கு.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.