மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், சாதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ ஸ்டைலில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று முடிவிலிருந்தார். ‘’மெர்சல் வந்தாலும் வரட்டும், நாங்களும் வர்றத்தான் போறோம்’’ என்று கெத்தாக சொல்லி வந்தார்.
ஆனால் இந்த டிக்கெட் விலை உயர்வுப் பிரச்சினை பெரிய தலைவலியைக் கொடுக்க ரிலீஸ் தேதியை நவம்பர் 3 அன்று மாற்றினார். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை இப்போது ஒரு வாரம் தள்ளி நவம்பர் 1௦ ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் சுசீந்திரன்.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.