பஞ்சாயத்து செய்யும் குஷ்பூ, லட்சுமி ராமகிருஷ்ணன்: நடிகை ஸ்ரீப்ரியா கோபம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது குடும்ப பிரச்சனைகளை வைத்து நடைபெறும் நிகழ்ச்சி. இதனை நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.
இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியிலும் நிஜங்கள் என்ற பெயரில் நடிகை குஷ்பூ குடும்ப பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இது மாதிரியான நிகழ்ச்சிகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்கும் அளவுக்கு வந்துள்ளது.
சாதாரண மக்களின் பிரச்சனையை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதன் மூலம் காசு பார்ப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்தில் காட்சிகள் இடம்பெற்றது.
இதனை கண்டித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கொதித்தெழுந்து டுவிட்டரில் திட்டி தீர்த்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தும் நடிகை ஸ்ரீப்ரியா சமீபத்தில் கோபமாக ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், மக்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் இருக்கிறது. குற்றச்செயல்கள் செய்திருந்தால் அதனை தீர்க்க பல்வேறு சட்ட பிரிவுகள் இருக்கிறது. ஆனால் அதனை விட்டுவிட்டு சினிமா நடிகைகள் நடுவர்களாக இருந்து கொண்டு இது போன்ற பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவது நல்லதல்ல. இதனை நிறுத்த வேண்டும் என்றார் கோபமாக.
மக்களின் பிரச்சனையை தீர்க்க இது ஒரு தளம் என்றால் அதனை கேமரா இல்லாமல் செய்யுங்கள். அவர்களை சரியான நபர்களிடன் அழைத்து செல்லுங்கள். வழக்கறிஞர்கள், ஆலோசகர்களிடம் அழைத்து செல்ல உதவுங்கள் எனவும் கூறியுள்ளார்.
var VUUKLE_EMOTE_SIZE = “90px”;
VUUKLE_EMOTE_IFRAME = “180px”
var EMOTE_TEXT = [“HAPPY”,”INDIFFERENT”,”AMUSED”,”EXCITED”,”ANGRY”]

var VUUKLE_STAR_RATING_HIDE = false; var VUUKLE_CHAT_HIDE = false; var VUUKLE_CUSTOM_TEXT = ‘{“rating_text”:”Give a rating”,”comment_text_0″:”Leave a comment”,”comment_text_1″:”comment”,”comment_text_multi”:”comments”,”stories_title”:”Talk of the Town”}’; var ARTICLE_AUTHORS = btoa(encodeURI(‘[{“name”:”Srinath Srinath”,”email”:”tamilcinema16@gmail.com”}]’)); create_vuukle_platform(“e4df2da9-ed4c-4b78-8068-349a26e89e1f”, “2352”, “0”, “Latest News”, “u0baau0b9eu0bcdu0b9au0bbeu0bafu0ba4u0bcdu0ba4u0bc1 u0b9au0bc6u0bafu0bcdu0bafu0bc1u0baeu0bcd u0b95u0bc1u0bb7u0bcdu0baau0bc2, u0bb2u0b9fu0bcdu0b9au0bc1u0baeu0bbf u0bb0u0bbeu0baeu0b95u0bbfu0bb0u0bc1u0bb7u0bcdu0ba3u0ba9u0bcd: u0ba8u0b9fu0bbfu0b95u0bc8 u0bb8u0bcdu0bb0u0bc0u0baau0bcdu0bb0u0bbfu0bafu0bbe u0b95u0bcbu0baau0baeu0bcd!”, “en”, “”, “”, “”, “”,ARTICLE_AUTHORS);

Source: Tamilcinema.com

2 thoughts on “பஞ்சாயத்து செய்யும் குஷ்பூ, லட்சுமி ராமகிருஷ்ணன்: நடிகை ஸ்ரீப்ரியா கோபம்!

 • March 28, 2017 at 3:59 pm
  Permalink

  What you said was actually very logical. However, think about this, what if you added a little content?
  I ain’t saying your content isn’t good, however what
  if you added something that grabbed people’s attention? I mean பஞ்சாயத்து செய்யும்
  குஷ்பூ, லட்சுமி ராமகிருஷ்ணன்:
  நடிகை ஸ்ரீப்ரியா கோபம்!
  | Simply Cinema Tamil is kinda plain. You might peek at
  Yahoo’s front page and watch how they create post titles
  to get people to click. You might add a related video or a picture
  or two to grab people excited about what you’ve
  got to say. In my opinion, it could bring your posts a little bit more interesting.

 • March 30, 2017 at 2:42 am
  Permalink

  Everyone loves what you guys tend to be up too. This type of clever
  work and reporting! Keep up the awesome works guys I’ve
  included you guys to our blogroll.

Leave a Reply

Your email address will not be published.