பிரபு தேவாவின் ‘தேவி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ப்ளான்!

‘இது என்ன  மாயம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தேவி’. 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபு தேவா ஹீரோவாக களமிறங்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.  மேலும், எமி ஜாக்சன், சோனு சூத், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை பிரபு தேவா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரித்துள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு சாஜித் – வாஜித் & விஷால் மிஷ்ரா இசையமைத்துள்ளனர்.  இப்படமும் தமிழ் சினிமாவில் ட்ரெண்டு அடித்து கொண்டிருக்கும் ஹாரர் காமெடிப் படமாம். ஏற்கெனவே, ரிலீஸான இதன் டீஸர்கள் & டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடவுள்ளது ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம். இந்நிலையில், படத்தில் இடம் பெரும் ‘சல்மார்’ எனும் பாடலை வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.
Source: Tamilcinema.com

One thought on “பிரபு தேவாவின் ‘தேவி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ப்ளான்!

  • March 30, 2017 at 2:52 am
    Permalink

    Hi my family member! I want to say that this post is awesome, nice written and include almost
    all important infos. I would like to look extra posts
    like this .

Leave a Reply

Your email address will not be published.