‘கிளுகிளு’ ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் ‘கொழுகொழு’ பூனம் பாஜ்வா

ஹரி இயக்கத்தில் பரத்திற்கு ஜோடியாக ‘சேவல்’ படத்தில் அறிமுகமானவர்தான் பூனம் பாஜ்வா. ஹரி ராசியால் நயன்தாரா போல பெரிய ஹீரோயின் ஆகலாம் என்று கனவில் இருந்தவருக்கு அவர் நடித்த ‘தெனாவெட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக் கோட்டை’ படங்கள் எல்லாம் அவரை வீட்டிலேயே பிஸியாக இருக்க வைத்தன.
கஷ்டப்பட்டு ‘ரோமியோ ஜூலியட்’டில் கெஸ்ட் ரோல் செய்தார். ‘ஆம்பள’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி, சுந்தர் சி.யின் மனதில் ஆழமாக கால் வைத்து அவரின் ‘அரண்மனை 2’, ‘முத்தின கத்திரிக்கா’ படங்களில் நடித்தார்.
இப்போது கிளுகிளு நாயகன் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில்                          கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘குப்பத்து ராஜா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப் படத்தை டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்க, பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  குட்டிப் பையன் ஜி.வி.பிரகாஷுக்கு கொழுகொழு பூனம் பாஜ்வா எப்படி செட்டாவார் என்பதுதான் நம் சந்தேகம்.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.