பத்து முறை அபார்ஷன் பாவனா வேதனை

காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு சீண்டலுக்கு உள்ளான பாவனாவிற்கு சமீபத்தில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கல்யாண கலையில் இருப்பதற்கு நேர்மாறாக களையிழந்து ஒருவித சோகமாகவே சுற்றி வருகிறாராம் பாவனா. காரணம் அந்த கார் கடத்தல் சீண்டல்தானாம். இந்நிலையில் அவர் ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்,
‘’நான் என் 15 வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டதால் என்னைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தன. நான் பட வாய்ப்புக்காக இயக்குனர்களோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன். அதன் மூலம் நான் கர்ப்பமானேன். பிறகு அபார்ஷன் பண்ணிக் கொண்டேன். இதனால்தான் நான் தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோயினானேன் என மனசாட்சியே இல்லாமல் என்னைப் பற்றி வதந்தி பரப்புவார்கள். அதுவும் நான் வருஷத்திற்கு ஒரு பத்து தடவையாவது அபார்ஷன் பண்ணிக் கொள்வேன் என்று வாய் கூசாமல் பேசுவார்கள். நான் மனதில் பட்டதை ஒளிமறைவின்றி நேரடியாகப் பேசும் குணமுள்ளவள். அதனால்தான் இப்படியெல்லாம் என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்’’ என தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
 
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.