‘தங்க ரதம்’ – விமர்சனம்

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நெட்டிவிட்டி படங்களே வருவதில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பவர்களெல்லாம் சந்தோசப்படும் அளவிற்கு ஒரு படம் வந்துள்ளது. அந்த படம்தான் தங்க ரதம்.
கதை
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு யார் முதலில் காய்கறி லோடை தங்களது டெம்போவில் ஏற்றி வருவது என்று நாயகன் வெற்றிக்கும், சௌந்தர் ராஜாவிற்கும் போட்டி வருகிறது. ஒவ்வொரு முறையும் வெற்றியே ஜெயிப்பதால் இருவருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு, நாளடைவில் பகையாக மாறுகிறது. இந்த நிலையில் சௌந்தர் ராஜா தங்கை நாயகி அதிதி மீது வெற்றிக்கு காதல் வருகிறது. இந்த விஷயம் சௌந்தர் ராஜாவிற்கு தெரிந்து வெற்றியை கொல்லத் திட்டமிடுகிறான். வெற்றி, அதிதி காதல் சேர்ந்ததா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
நாயகனாக நடித்த வெற்றி, உயரமான நடிகர். டெம்போ டிரைவராக தன் தோற்றத்தை கேரக்டருக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். ஆனால் குரலில் அநியாயத்திற்கு மலையாள வாடை.
நாயகி அதிதி கிருஷ்ணா, வெற்றியுடன் காதல், சௌந்தர் ராஜாவுடன் பாசம் என அசத்தியிருக்கிறார்.
சௌந்தரராஜா, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், ராண்டில்யா, பாண்டியன் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டையும், கிராமங்களின் அழகையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். டோனி பிரிட்டோ இசையில் தங்கரதம் குத்து பாடல் ஆட்டம போட வைக்கிறது.
அறிமுக இயக்குனர் பாலமுருகன் ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதையை தர முயன்றிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கூட்டியிருந்தால் தங்க ரதம் இதமானதாக இருந்திருக்கும்.
 
Source: Tamilcinema.com

One thought on “‘தங்க ரதம்’ – விமர்சனம்

  • June 22, 2017 at 7:51 pm
    Permalink

    I just want to say I am just all new to weblog and truly liked you’re web page. Very likely I’m likely to bookmark your site . You amazingly have superb article content. Thanks a lot for revealing your blog.

Leave a Reply

Your email address will not be published.