விவாகரத்துப் பெற்றார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும் அஸ்வின் ராம்குமார் என்பவருக்கும் 2௦1௦ ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். இந்நிலையில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்துக் கேட்டு மனு தாக்கல் செய்தார் சௌந்தர்யா. இதன் பிறகு அஸ்வினும் விவாகரத்துக் கேட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதத்தை வைத்தனர். இதனால் நீதிபதி ஜூலை 4 ஆம் தேதி விவாகரத்து அளிப்பதாகக் கூறினார். இதன்படி நேற்று இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து அளித்தார்.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.