இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணையும் விஜய் சேதுபதியின் படம்

‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவிருக்கும் படம்தான் ‘மாமனிதன்’. ‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘தர்மதுரை’ என இரண்டு படங்களில் தேசிய விருதுகளை பாடல்களுக்குப் பெற்றுத் தந்தவர் வைரமுத்து. ஆனால் மாமனிதனில் வைரமுத்து இருப்பாரா என்பது சந்தேகமே.
காரணம் ‘மாமனிதன்’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இசையமைப்பாளர் இல்லை. இசைஞானி இளையராஜாவும்தான். முதல் முறையாக யுவனும், இளையராஜாவும் இணைந்து இசையமைப்பது ‘மாமனிதன்’ படத்திற்குத்தான். இந்த பெருமை இயக்குனர் சீனு ராமசாமியையே சேரும்.
Source: Tamilcinema.com

2 thoughts on “இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணையும் விஜய் சேதுபதியின் படம்

Leave a Reply

Your email address will not be published.