‘’நான் அப்படி செய்திருக்கக் கூடாது’’ மனம் திறந்த தனுஷ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு தனியார் டிவி சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த தனுஷ் அந்த சேனலின் தொகுப்பாளினி கேட்ட சுசி லீக்ஸ் கேள்வியால் டென்ஷனான தனுஷ், ‘’முட்டாள்தனமான பேட்டி’’ என்று கூறிவிட்டு மைக்கைக் கழட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினார். பிறகு திரும்பி வந்து படம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். இருந்தாலும் தனுஷின் அந்த செயல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தற்போது அந்த விஷயத்தைப் பற்றி மனம் திறந்து சொல்கிறார்.
‘’பொதுவாக நான் அமைதியான சுபாவம் உடையவன். ஆனால் என் குணம் சாராத வழியில் நான் அதனைச் செய்துவிட்டேன். என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. நான் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால் அதனை தவிர்ப்பதற்காக நான் செய்தது தேவையற்றது. உண்மையாகக் கூற வேண்டும் என்றால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை. வரவிருக்கும் என்னுடைய புதிய படத்துகான பணியில் பிஸியாக இருக்கிறேன். நான் செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் அந்த பத்திரிகையாளரிடம் அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள் என்று கேட்டிருக்க வேண்டும்’’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தனுஷ்.
 
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.