‘’செல்வராகவன் நேர்த்தியை விரும்பும் இயக்குனர்’’ – ரெஜினா பாராட்டு

‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமான ரெஜினா தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாகவும் தமிழில் வளர்ந்து வரும் ஹீரோயினாகவும் உள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ரெஜினா. ஆனால் படம் வெளியீடு என்று மர்மமாகவே இருக்கிறது.
அந்தப் படத்தைப் பற்றி ரெஜினா கூறும்போது,
‘‘நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டுக்காக காத்திருப்பது வெறுப்பாக இல்லை. ஒவ்வொரு முறை வெளியீடு தேதி அறிவிக்கும்போதும், முதல் முறை அறிவிப்பின் போது இருந்தது போல எனக்குள் அதே ஆர்வம் இருக்கிறது. நான் ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு படம் அது. பேய் படமோ, மர்மப் படம் என்றோ சொல்ல முடியாது. இருண்ட படம் என்று சொல்லலாம். அந்த வகையில் முதல் முயற்சியும் கூட.
செல்வராகவனுடன் பணியாற்றுவது கடினமாக இருக்கும் என பலர் என்னிடம் கூறினர். அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. செல்வராகவன் கண்டிப்பான இயக்குநர் கிடையாது. ஆனால் நேர்த்தியை விரும்புவர். தனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியும்’’ என்றார்.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.