ஒரே நாளில் மோதும் விஷால், ஜி.வி.பிரகாஷ்

வருடத்தின் மீதமிருக்கும் இந்த ஐந்து மாதங்களில் தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என வரிசையாக ரிலீசாகப்போகின்றன. செப்டம்பர் 27 ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஸ்பைடர்’, செப்டம்பர் 29ஆம் தேதி மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ படங்கள் மோதிக் கொள்கின்றன.
இந்நிலையில் அதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே விஷாலும், ஜி.வி.பிரகாஷும் மோதிக்கொள்ளப் போகிறார்கள். மிஷ்கின் இயக்கத்தில் துப்பறியும் நிபுணராக நடித்திருக்கும் ஆக்ஷன் படமான ‘துப்பறிவாளன்’, இயக்குனர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘செம’ என இரண்டு படங்களும் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகின்றன. இந்நிலையில் ‘செம’ படத்திற்கு சென்சாரில் U சர்டிஃபிகேட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.