‘’டைரக்டர் பாலா ஒரு மாஸ்டர்’’ புகழும் ஜி.வி.பிரகாஷ்

‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா ஆரம்பிக்கவிருந்த படம் ‘குற்றப் பரம்பரை’. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை வைத்து ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. பாலா இயக்கிய படங்களிலேயே மிகக் குறுகிய காலத்தில் முடித்த படம் இதுதான்.
பாலாவைப் பற்றி படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘’பாலா சார் படத்தில் ஒவ்வொரு சீனிலும் நடிப்பது எனபது மிகவும் கஷ்டமான காரியம்தான். சும்மா போய்விட்டு நடித்து முடித்து வந்துவிட முடியாது. ஒவ்வொரு சீனுக்கும் பாலா சார் கடினமாக உழைப்பார். கேரக்டர்களை உருவாக்குவதிலும் சரி, உண்மைக்கு மிக நெருக்கமான காட்சிகளை வைப்பதிலும் சரி பாலா சார் அதில் மாஸ்டர்தான்’’ என்று புகழ்ந்துள்ளார்.
Source: Tamilcinema.com

Leave a Reply

Your email address will not be published.